Category Archives: திருவெம்பாவை

திருவெம்பாவை பாடல் – 20

திருவெம்பாவை பாடல் – 20

போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்

போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள்

போற்றிஎல் லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம்

போற்றிஎல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்

போற்றிஎல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்

போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம்

போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்

போற்றியாம் மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய்.   ——— [ 20 / 20 ]

இப்பாடலின் விளக்கத்தைப் படிக்க ஓடைக்கு   வாருங்கள்.

திருவெம்பாவை பாடல் – 19

திருவெம்பாவை பாடல் – 19

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்

றங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்

எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம்கேள்

எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க

எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க

கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க

இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்

எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய்.  ——— [ 19 / 20 ]

இப்பாடலின் விளக்கத்தைப் படிக்க ஓடைக்கு   வாருங்கள்.

திருவெம்பாவை பாடல் – 9

திருவெம்பாவை பாடல் – 9

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே

பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே

உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம்

உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்

அன்னவரே எம்கணவ ராவார் அவர்உகந்து

சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்

இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்

என்ன குறையும் இலோமேலோ ரெம்பாவாய்.  ——— [ 9 / 20 ]

இப்பாடலின் விளக்கத்தைப் படிக்க ஓடைக்கு   வாருங்கள்.

திருவெம்பாவை பாடல் – 10

திருவெம்பாவை பாடல் – 10

 

பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்

போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே

பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்

வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்

ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்

கோதில் குலத்தரன்றன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்

ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்

ஏதவனைப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய்.  ——–[ 10 / 20 ]

இப்பாடலின் விளக்கத்தைப் படிக்க ஓடைக்கு   வாருங்கள்.

திருவெம்பாவை பாடல் – 18

திருவெம்பாவை பாடல் -18

 

அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்

விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற்போல்

கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்

தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்

பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்

விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்

கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்

பெண்ணேயிப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.    —— [ 18 / 20 ]

இப்பாடலின் விளக்கத்தைப் படிக்க ஓடைக்கு   வாருங்கள்.

திருவெம்பாவை பாடல் – 17

திருவெம்பாவை பாடல் -17

 

செங்கண வன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்

எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்

கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி

இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்

செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை

அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை

நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்

பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.   —— [ 17 / 20 ]

இப்பாடலின் விளக்கத்தைப் படிக்க ஓடைக்கு   வாருங்கள்.

திருவெம்பாவை பாடல் – 16

திருவெம்பாவை பாடல் -16

 

முன்னிக் கடலைச் சுருக்கி யெழுந்துடையாள்

என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்

மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்

பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்

என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்

தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு

முன்னி அவணமக்கு முன்சுரக்கும் இன்னருளே

என்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய்.  ——– [ 16 /20 ]

இப்பாடலின் விளக்கத்தைப் படிக்க ஓடைக்கு   வாருங்கள்.

திருவெம்பாவை பாடல் – 15

திருவெம்பாவை பாடல் -15

 

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்

சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர

நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்

பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள்

பேரரையற் கிங்ஙனே பித்தொருவர் ஆமாறும்

ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்

வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி

ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.   —–  [15 /20 ]

இப்பாடலின் விளக்கத்தைப் படிக்க ஓடைக்கு   வாருங்கள்.

திருவெம்பாவை பாடல் – 14

திருவெம்பாவை பாடல் -14

 

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்

கோதை குழலாட வண்டின் குழாமாடச்

சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி

வேதப் பொருள்பாடி அப்பொருள்ஆ மாபாடிச்

சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி

ஆதி திறம்பாடி அந்தம்ஆ மாபாடிப்

பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்

பாதத் திறம்பாடி ஆடேலோ ரெம்பாவாய்.    ———[ 14 / 20 ]

இப்பாடலின் விளக்கத்தைப் படிக்க ஓடைக்கு   வாருங்கள்.

திருவெம்பாவை பாடல் – 13

திருவெம்பாவை பாடல் -13

 

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்

அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்

தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்

எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த

பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம்

சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்

கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்

பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.   ——[ 13 / 20]

இப்பாடலின் விளக்கத்தைப் படிக்க ஓடைக்கு   வாருங்கள்.