மந்திரங்கள் படும் பாடு

Saturday, September 29, 2012

மந்திரங்கள் படும் பாடு

ஸ்வர்ணாகர்ஷண பைரவர் வழிபாட்டுக்கான மூல மந்திரத்தைத் தேடியபோது எனக்குக் கிடைத்தவை ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருந்தன. மூல மந்திரத்துக்கு உண்மையான மூலம் எது எனத் தெரியாமல் என்பாடு திண்டாட்டமானதுதான் மிச்சம்.
1.   சொர்ணாகர்ஷண பைரவர் ஸ்தோத்திரம்: (http://www.aanmigakkadal.com/)
”ஓம் ஏம் க்லாம் க்லீம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம்ஸக: வம் ஆபத்துத்தாரணாய அஜாமிலா பத்தாய லோகேஸ்வராய ஸ்வர்ணாகர்ஷண பைரவாய மம தாரித்தர்ய வித்வேஷணாய ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நம:”
2.   ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர் மூல மந்திரம் (http://www.aanmigakkadal.com/)
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் ஆபதுத்தாரணாய ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் அஜாமளபந்ததாய லோகேஸ்வராய ஸ்வர்ணாகர்ஷண பைரவாய,மம தாரித்ரிய வித்வேஷனாய மஹா பைரவாய நமஹ,ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்
3.   ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர் மூலமந்திரம்  (http://www.aanmigakkadal.com/)
ஓம் ஐம் க்லாம் கிலீம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் வம்ஸஹ ஆபதோத்தாரணாய அஜாமில பந்தனாய லோகேஸ்வராய ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவாய மமதாரித்ரய வித்வேஷனாய ஆம் ஸ்ரீம் மஹா பைரவாய ஸ்வாஹா!
4.   சொர்ண ஆகர்ஷண பைரவர் மூல மந்திரம்.( (http://www.aanmigakkadal.com/)
ஓம் ஏம் ஐம் க்லாம் க்லீம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் சகவம்ஸ ஆபதுத்தோரணாய அஜாமிளபந்தநாய                                                                 லோகேஸ்வராய ஸ்வர்ணாகர்ஷண பைரவாய மமதாரித்திரிய வித்வேஷணாய ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நமஹ
5.   moola mantra (http://www.indiadivine.org/audarya/hinduism-forum/746237-swarna-akarshana-mantra-sadhana.html)
om em klaam klim kluum hraam hrim hrum kakha: vam aapadud dhaaranaaya ajaamala baktaayaa lokeshwaraaya swarnakarshana bhairavaaya mama dharidrayam vidveshanaaya om sreem maha bhairavaaya nama:
6.   சொர்ணாகர்ஷண பைரவ மந்திரம் (http://omsivamandram.blogspot.in/2011_02_01_archive.html)
ஓம் ஏம் க்லாம் க்லீம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம்
ஹ்ரூம்ஸக: வம் ஆபத்துத்தாரணாய
அஜாமிலா பத்தாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய
மம தாரித்தர்ய வித்வேஷணாய
ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நம:
மேற்கண்ட எல்லாவற்றிலும் ஒன்றுக்கொன்று மாறுபாடு உள்ளது. எது சரி என்று எனக்குத் தெரிய வில்லை. குழம்பிப் போன நான் எனக்கு புரிந்து கொள்வதற்கு எளிதான கீழ்க்கண்ட பாடலைப் பயன்படுத்தலாம் என முடிவு செய்திருக்கிறேன். படர்க்கைக்கு ஏற்றவாறு இருந்த வார்த்தைகளை முன்னிலைக்கு ஏற்ற மாதிரி மாற்றி உள்ளேன். (உதாரணம் பெய்திடுவான் = பெய்திடுவாய்)
ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம்
தனந்தரும்   வயிரவன்    தளிரடி       பணிந்திடின்  தளர்வுகள் தீர்ந்து விடும்
மனந்திறந்து அவன்பதம்   மலரிட்டு     வாழ்த்திடின் மகிழ்வுகள் வந்து விடும்
சினந்தவிர்த்து அன்னையின் சின்மயப்   புன்னகை     சிந்தையில் ஏற்றவனே
தனக்கிலை   ஈடு         யாருமே     என்பாய்,       தனமழை பெய்திடுவாய்
வாழ்வினில் வளந்தர      வையகம்    நடந்தாய்,     வாரியே     வழங்கிடுவாய்
தாழ்வுகள்    தீர்ந்திட      தளர்வுகள்    மறைந்திட    தானென    வந்திடுவாய்
காழ்ப்புகள்   தீர்த்தாய்     கானகம்      நின்றாய்,      காவலாய் வந்திடுவாய்
தனக்கிலை   ஈடு         யாருமே     என்பாய் ,     தனமழை   பெய்திடுவாய்
முழு நிலவு  அதனில்     முறையொடு பூஜைகள்     முடித்திட   அருளிடுவாய்
உழுதவன்    விதைப்பாய் உடைமைகள் காப்பாய்     உயர்வுறச்   செய்திடுவாய்
முழுமலர்த் தாமரை      மாலையை   ஜெபித்து      முடியினில் சூடிடுவாய்
தனக்கிலை   ஈடு         யாருமே     என்பாய் ,      தனமழை பெய்திடுவாய்
நான்மறை   ஒதுவார்     நடுவினில்   இருப்பாய்,     நான்முகன்        நானென்பாய்
தேனினில்   பழத்தைச்    சேர்த்தவன் ருசிப்பாய் ,    தேவைகள் நிறைத்திடுவாய்
வான்மழை   எனவே      வளங்களைப் பொழிவாய்  வாழ்த்திட   வாழ்த்திடுவாய்
தனக்கிலை   ஈடு         யாருமே     என்பாய்,    தனமழை   பெய்திடுவாய்
பூதங்கள்     யாவும்      தனக்குள்ளே வைப்பாய்,    பூரணன்     நான் என்பாய்
நாதங்கள்    ஒலிக்கும்    நால்வகை   மணிகளை   நாணினில்   பூட்டிடுவாய்
காதங்கள்    கடந்து       கட்டிடும்     மாயம்       யாவையும்   போக்கிடுவாய்
தனக்கிலை   ஈடு         யாருமே     என்பாய்,      தனமழை   பெய்திடுவாய்
பொழில்களில் மணப்பாய் பூசைகள்     ஏற்பாய்,      பொன்குடம் ஏந்திடுவாய்
கழல்களில் தண்டை     கைகளில்    மணியணி    கனகனாய்   இருந்திடுவாய்
நிழல் தரும் கற்பகம்      நினைத்திட   பொழிந்திடும் நிர்மலன்    நானென்பாய்
தனக்கிலை   ஈடு         யாருமே     என்பாய் ,           தனமழை        பெய்திடுவாய்
சதுர்முகன்   ஆணவத்     தலையினைக் கொய்தாய்,   சத்தொடு   சித்தானாய்
புதரினில்    பாம்பைத்    தலையினில்        வைத்தாய்,    புண்ணியம்        செய்யென்றாய்
பதரினைக்   குவித்து      செம்பினை   எரித்தாய்,    பசும்பொன் இதுவென்றாய்
தனக்கிலை   ஈடு         யாருமே     என்பாய் ,     தனமழை   பெய்திடுவாய்
ஜெய ஜெய வடுக        நாதனே      சரணம்    வந்தருள்       செய்திடுவாய்
ஜெய ஜெய க்ஷேத்திர    பாலனே     சரணம்    ஜெயங்களைத் தந்திடுவாய்
ஜெய ஜெய வயிரவா     செகம் புகழ் தேவா ,  செல்வங்கள்    தந்திடுவாய்
தனக்கிலை   ஈடு         யாருமே     என்பாய்,   தனமழை      பெய்திடுவாய்

Leave a comment