Category Archives: ஆன்மீகம்

திருவெம்பாவை பாடல் – 12

திருவெம்பாவை பாடல் -12

ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடுந்

தீர்த்தன்நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும்

கூத்தன்இவ் வானும் குவலயமும் எல்லோமும்

காத்தும் படைத்தம் கரந்தும் விளையாடி

வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்

ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்

பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்

ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோ ரெம்பாவாய்.     ———-[12 / 20]

 

இப்பாடலின் விளக்கத்தைப் படிக்க ஓடைக்கு   வாருங்கள்.

திருவெம்பாவை பாடல் – 11

திருவெம்பாவை பாடல் – 11

 

மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்

கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி

ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற்

செய்யாவெண் ணீறாடி செல்வா சிறுமருங்குல்

மையார் தடங்கண் மடந்தை மணவாளா

ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்

உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்

எய்யாமற் காப்பாய் எமையேலோ ரெம்பாவாய்.  ————— [ 11 /20 ]

இப்பாடலின் விளக்கத்தைப் படிக்க ஓடைக்கு   வாருங்கள்.

திருவெம்பாவை பாடல் – 8

திருவெம்பாவை பாடல் – 8

 

கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்

ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்

கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை

கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ

வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய்

ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ

ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை

ஏழைபங் காளனையே பாடேலோ ரெம்பாவாய்.  ——-[ 8 /20 ]

இப்பாடலின் விளக்கத்தைப் படிக்க ஓடைக்கு   வாருங்கள்.

திருவெம்பாவை பாடல் – 7

திருவெம்பாவை பாடல் – 7

அன்னே இவையுஞ் சிலவோ பலவமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமுஞ்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோ ரெம்பாவாய்.    ——–[7/20]

இப்பாடலின் விளக்கத்தைப் படிக்க ஓடைக்கு   வாருங்கள்.

திருவெம்பாவை பாடல் – 6

திருவெம்பாவை பாடல் – 6

மானேநீ நென்னலை நாளைவந் துங்களை

நானே யெழுப்புவன் என்றலும் நாணாமே

போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ

வானே நிலனே பிறவே அறிவரியான்

தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்

வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்

ஊனே உருகாய் உனக்கே உறும்எமக்கும்

ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோ ரெம்பாவாய். ——-[6/20]

இப்பாடலின் விளக்கத்தைப் படிக்க ஓடைக்கு   வாருங்கள்.

திருவெம்பாவை பாடல் – 5

திருவெம்பாவை பாடல் -5

மாலறியா நான்முகனுங் காணா மலையினைநாம்

போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும்

பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்

ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்

கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ்

சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்

றோலம் இடினும் உணராய் உணராய்காண்

ஏலக் குழலி பரிசேலோ ரெம்பாவாய்.                  ——-[5/20]

இப்பாடலின் விளக்கத்தைப் படிக்க ஓடைக்கு   வாருங்கள்.

திருவெம்பாவை பாடல் – 4

திருவெம்பாவை பாடல் 4

ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ

வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ

எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்

கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே

விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்

கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்

உண்ணெக்கு நின்றுருக யாமாட்டோம் நீயேவந்

தெண்ணிக் குறையில் துயிலேலோ ரெம்பாவாய்.     ——-[4/20]

இப்பாடலின் விளக்கத்தைப் படிக்க ஓடைக்கு  வாருங்கள்.

திருவெம்பாவை பாடல் – 3

திருவெம்பாவை பாடல் – 3

முத்தன்ன வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தென்
அத்தன்ஆ னந்தன் அமுதனென் றள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோ மறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோ ரெம்பாவாய்.             ——-[3/20]

இப்பாடலின் விளக்கத்தைப் படிக்க ஓடைக்கு வாருங்கள்.

திருவெம்பாவை பாடல் – 2

திருவெம்பாவை பாடல் 2

பாசம் பரஞ்சோதிக் கென்பாய்  இராப்பகல் நாம்

பேசும்போ தெப்போதிப் போதா ரமளிக்கே

நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்

சீசி யிவையுஞ்  சிலவோ விளையாடி

ஏசும் மிடமீதோ விண்ணோர்க  ளேத்துதற்குக்

கூசு மலர்ப்பாதந் தந்தருள  வந்தருளுந்

தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்

ஈசனார்க்  கன்பார்யாம் ஆரேலோ  ரெம்பாவாய். ——-[2/20]

இப்பாடலின் விளக்கத்தைப் படிக்க ஓடைக்கு வாருங்கள்.

திருவெம்பாவை பாடல் – 1

திருவெம்பாவை பாடல் 1

ஆதியும்  அந்தமும்  இல்லா    அரும்பெருஞ்

சோதியை யாம்பாடக்   கேட்டேயும் வாள்தடங்கண்

மாதே வளருதியோ  வன்செவியோ  நின்செவிதான்

மாதேவன் வார்கழல்கள்  வாழ்த்திய வாழ்த்தொலிபோய்

வீதிவாய்க்  கேட்டலுமே  விம்மிவிம்மி  மெய்மறந்து

போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன்

ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னேஎன்னே

ஈதே எந்தோழி  பரிசேலோர்    எம்பாவாய்!              ————— [1/20]

இப்பாடலின் விளக்கத்தைப் படிக்க ஓடைக்கு வாருங்கள்.